அடுத்த ஐபிஎல் தொடரில் இந்த தமிழக வீரர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் - வி.வி.எஸ். லெக்ஷ்மணன்.!

அடுத்த ஐபிஎல் தொடரில் இந்த தமிழக வீரர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் - வி.வி.எஸ். லெக்ஷ்மணன்.!

Update: 2020-11-19 11:24 GMT

இந்த வருட ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தொடர் முழுவதும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக தொடர்ந்து யார்க்கர் வீசும் இவரது திறன் அனைவரது கண்களிலும் பட்டது. மேலும் இந்திய அணியில் தேர்வு குழுவினரும் இவரது இந்த திறனால் ஈர்க்கப்பட்டு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முதன்முறையாக வாய்ப்பையும் வழங்கியுள்ளனர். 

இந்நிலையில் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள நடராஜனுக்கு இந்திய அணியில் இருந்து கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்தும் அரசியல் தலைவர்களிடம் இருந்தும் வாழத்துகள் குவிந்து வருகின்றது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகருமான வி.வி.எஸ். லெக்ஷ்மணன் கூறும் போது : நடராஜனுக்கு ஒரு ஒவரில் ஆறு பந்துகளும் யார்க்கஸ் போடும் திறமை உண்டு. யார்க்கஸ் மட்டும் தான் உங்களுக்கு அவரிடம் இருக்கும் திறமை என்ற நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் அவரிடம் அதை விட மேலான திறமைகளும் உள்ளது. 

அதாவது அவரது பந்து வீச்சில் வேரியேஷன் காட்டக்கூடிய வல்லமை கொண்டவர் என்பதை நான் சொல்லியாக வேண்டும். அவரால் ஷார்ப் பவுன்சர், ஆப் கட்டர், ஸ்லோவர் பால், அவுட் சைட் யார்க்கர் என வெரைட்டியாக வீச முடியும். ஏனோ அதனை இந்த ஐபிஎல் தொடரை செய்ய தவறிவிட்டார்.

குறிப்பாக புது பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி திறமையும் அவரிடம் உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் இவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

அதற்கு உதாரணமாக ஆர்சிபி அணியின் ஏ.பி.டி விக்கெட்டை வீழ்த்தியதே அதற்கு சான்று என புகழ்ந்துள்ளார். தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய தொடரே அவருக்கு முதல் தொடராக அமைந்துள்ளது. இதுவரை 22 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.

Similar News