தோல்வி அடைந்தாலும் எங்கள் அணியில் ஒரு சிறந்த வீரரை கண்டறிந்துள்ளோம் - வார்னர் மகிழ்ச்சி.!

தோல்வி அடைந்தாலும் எங்கள் அணியில் ஒரு சிறந்த வீரரை கண்டறிந்துள்ளோம் - வார்னர் மகிழ்ச்சி.!

Update: 2020-11-09 17:00 GMT


ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றி பெற்று மும்பை அணி இறுதி போட்டிக்கு சென்றது. இந்நிலையில் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 


முதலில் விளையாடிய டெல்லி அணியில் தவண் மற்றும் ஸ்டோனிஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஸ்டோனிஸ் 38 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 21 ரன்னில் பெவுலியன் திரும்ப அடுத்து வந்த ஹெட்மயர் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினர். தவண் 78 ரன்னில் அவுட் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : எந்த ஒரு அணியும் எங்களுக்கு சிறப்பான துவக்கத்தை அளிக்க வாய்ப்பு தரமாட்டார்கள். டெல்லி போன்ற சிறந்த அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான துவக்கத்தை பெற்றிருக்கவேண்டும். இருப்பினும் இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த கண்டுபிடிப்பாக நடராஜனை கருதுகிறேன். இந்த தொடர் முழுவதும் அவர் சிறப்பாக விளையாடினார். அதுமட்டுமின்றி ரசித் கானும் பவுலிங்கில் அசத்தினார். மணிஷ் பாண்டே நம்பர் 3 இல் சிறப்பாக விளையாடினார். எங்கள் அணிக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

Similar News