இரண்டாவது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங்!

இன்று நடைபெறும் (பிப்ரவரி 9) இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்ற பின்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Update: 2022-02-09 14:55 GMT

இன்று நடைபெறும் (பிப்ரவரி 9) இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்ற பின்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில், இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகளுடன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் இந்தியா 10 என்ற முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் இன்று இரண்டு அணிகளும் மீண்டும் மோதுகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News