கோலி இல்லனா என்ன இந்தியா அணியில் இவர் இருக்காரே  - ஹர்பஜன் சிங் அசத்தல் பேட்டி.!

கோலி இல்லனா என்ன இந்தியா அணியில் இவர் இருக்காரே  - ஹர்பஜன் சிங் அசத்தல் பேட்டி.!

Update: 2020-11-20 10:41 GMT

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி-20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டது. தற்பொழுது ஆஸ்திரேலியாவில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில் டி -20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கோலி தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆனால் டெஸ்ட் தொடரில் முதல் போட்டி மட்டும் தான் வீராட் கோலி விளையாடுவார். மற்ற போட்டிகளுக்கு ரோஹித் சர்மா அணியில் இணைவார் என கூறப்பட்டுள்ள நிலையில். ஐனவரி மாதம் வீராட் கோலிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் நாடு திரும்புகிறார். இந்நிலையில் இது இந்திய அணிக்கு பெரிய தாக்கத்தை கொடுக்கும் என பலர் கூறிவருகின்றனர்.

இது குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் முதல் போட்டியில் முடித்த பிறகு கோலி நாடு திரும்புவது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு தான் ஆனால் கோப்பையை இழக்கும் அளவிற்கு மோசமான செயல்பாடு இந்திய வீரர்களிடம் இருக்காது.

ஏனெனில் விராத் கோலியின் இடத்தை ஈடு செய்யும் அளவிற்கு அணியில் வீரர்கள் உள்ளனர். குறிப்பாக புஜாரா, ராகுல் ஆகியோர் இருப்பதால் கோலியின் இடத்தை நிரப்ப கூடிய பலம் வாய்ந்ததாக இந்திய அணி இருக்கிறது. 

ஏனெனில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 4 போட்டிகளில் விளையாடிய புஜாரா 521 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் ராகுல் 670 ரன்களுக்கு மேல் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக உள்ளார். எனவே இவர்கள் இருவரும் இருக்கும் வரை கோலியின் இழப்பு பெரிதளவு இந்திய அணியை பாதிக்காது என்று ஹர்பஜன் கூறினார்.

Similar News