இந்த சீசனில் கங்குலியை கவர்ந்த அந்த ஆறு இந்திய இளம் வீரர் யார்.!
இந்த சீசனில் கங்குலியை கவர்ந்த அந்த ஆறு இந்திய இளம் வீரர் யார்.!
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரோ கங்குலி இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இளம் வீரர்களில் ஆறு இந்திய இளம் வீரர்கள் தான் எனது சிறந்த இளம் வீரர்கள் என்ற கூறியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் வழக்கத்தை விட அதிக அளவில் இளம் வீரர்களின் பங்களிப்பு இருந்தது. இந்நிலையில் கங்குலியை கவர்ந்த அந்த ஆறு வீரர்கள் யார் என்பதை பார்போம்.
முதல் வீரர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் இவர் ஏற்கனவே பல ஐபிஎல் சிசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இருக்கிறார். இந்த சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி உள்ளார். அடுத்த வீரர் கேகேஆர் அணியின் ராகுல் திரிபாதி இவர் சென்னை அணிக்கு எதிராக 82 ரன்கள் குவித்தார். இந்த சீசனில் 230 ரன்கள் சேர்த்தார்.
தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பான பவுலிங் செய்தார். டேத் ஓவர்களில் சிறப்பான யர்கர்ஸ் போட்டுவதில் வல்லவர் என்ற பெயர் எடுத்துள்ளார். அடுத்த வீரர் ஆர்சிபி அணியின் தேவ்தெத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 472 ரன்கள் சேர்த்தார். சிறபபான தொடக்க ஆட்டகாரராக களம் இறங்கினார்.
கேகேஆர் அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுக்மன் கில் ஆகிய இருவரும் இந்த பட்டியலில் உள்ளார். தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளது குறிப்பத்தகுந்தது.