லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் வெல்ல போவது யார்.?
லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் வெல்ல போவது யார்.?
இலங்கையில் நடைபெற்ற வரும் லங்கா பிரிமியர் லீக் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லங்கா பிரிமியர் லீக் தொடரகல் ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடி வந்தனர். லீக் போட்டிகள் முடகவடைந்த நிலையில் முதல் நான்கு இடத்தை பிடித்த அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதி சுற்றுக்கு கண்டி டிராக்கர்ஸ் அணியை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் தகுதி பெற்றது.
முதல் அரையிறுதி போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியும் காலே கலேட்டர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் வலுவான கொழும்பு கிங்ஸ் அணியை காலே அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் டாம்புல்லா அணியும் ஜப்புனா அணியும் மோதின. இந்த போட்டியில் டாம்புல்லா அணியை வீழ்த்தி ஜப்புனா அணி இறுதி ப போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று இலங்கையில் உள்ள ஹம்பான்டுடா மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுகின்றது. இந்த போட்டியில் காலே அணி ஜப்புனா அணியை எதிர்கொள்ள உள்ளது. காலே அணிக்கு கேப்டனாக ராஜாபக்ஷா உள்ளார். அதே போல் ஜப்புனா அணிக்கு திசேரா பெரேரா உள்ளார்.
ஜப்புனா அணியில் அவேஷ்கா பெர்னான்டோ , மாலிக் , லக்மல், தனஜெயா டி சில்வா மற்றும் ஒலிவார். அதே போல் காலே அணியில் குணகதிலகா மற்றும் முகமத் அமீர் போன்ற வீரர்கள் உள்ளனர். இந்த முதல் சீசனில் எந்த அணி கோப்பை வெல்ல உள்ளது என எதிர்பார்ப்பு உள்ளது.