அட அட அடுத்த கேப்டன் இவரா.. ரோஹித் சர்மாவின் நிலை என்ன?

கேப்டனாக களமிறங்கும் அஜிங்கியா ரஹானே என்ற செய்தி உண்மையா?

Update: 2023-06-17 04:42 GMT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் முழுமையாக எந்த ஒரு முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்து இருக்கிறது. இதற்கு தலைமை தான் காரணம் என்று பல்வேறு தரப்புகளும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் இந்திய அணியை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜூலை 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் ஜூன் 27ஆம் தேதி இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முக்கியமான விஷயமாக கருதப்படுவது என்னவென்றால், இந்தத் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்க BCCI திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


எனவே ரோகித் சர்மா ஓய்விற்கு பிறகு இந்திய அணியும் புதிய கேப்டனாக பலர் நியமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் 18 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ள ரஹானே கேப்டனாக பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதி முடிவை தற்போதைய கேப்டன் ரோகித் ஷர்மாவுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு பிசிசிஐ முடிவு செய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News