6 ஆண்டுகளுக்கு காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி.. IPL-ல் மாஸ் காட்டிய விஷ்ணு வினோத்..

குஜராத்திற்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி.

Update: 2023-05-14 01:25 GMT

குஜராத் மற்றும் மும்பை அணி நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்று வருவதற்கு முக்கியமான காரணம் ஸ்டார் பிளேயர்களை வைத்துதான் இளம் வீரர்களை ஆட்டம் எதிர்பார்க்கும் வகையில் மும்பை அணியில் இடம் பெறவில்லை என்று ஏற்கனவே குஜராத் அணி ஹர்திக் பாண்டிய விமர்சித்து இருந்தார்.


இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மும்பை அணியின் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் தங்களுக்கு அதிகமான திறமை இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக அவர்கள் உடைய ஆட்டம் அமைந்து இருந்தது. கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு வினோத் ஏற்கனவே பல்வேறு அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


இவ்வளவு ஏன் 2017ஆம் ஆண்டு RCB அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு களமிறக்கப்பட்டார். டெல்லி அணிக்கு எதிராக களம் இறக்கப்பட்ட இவரால் பெரிய அளவில் ரன்களை சேர்க்க முடியவில்லை. இதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இவர் எந்த ஒரு ஆட்டத்திலும் பெருதளவில் திறமைகளை வெளிப்படுத்த வில்லை. இந்த நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விஷ்ணு வினோத்தை கடந்த ஆண்டு ஏலத்தில் மும்பை அணி ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது. இந்த நிலையில் சரியான நேரத்தில் மும்பை அணி நிர்வாகம் விஷ்ணு வினோத்தின் திறமையை கண்டறிந்து வாய்ப்பு கொடுத்துள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News