சிட்னி டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவாரா நடராஜன்?

சிட்னி டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவாரா நடராஜன்?

Update: 2021-01-02 12:03 GMT
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ம் தேதி துவங்க உள்ளது.

இந்த தொடரின் இரண்டாவது போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகி நாடு திரும்ப உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. ஏற்கனவே முகமது ஷமி காயம் காரணமாக விலகியிருக்கும் நிலையில், தற்போது உமேஷ் யாதவும் காயம் காரணமாக விலகுவது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்கப்பட்ட நிலையில், உமேஷ் யாதவிற்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஷமிக்கு மாற்று வீரராக ஷர்துல் தாகூர் அறிவிக்கப்பட்ட நிலையில், 2வது டெஸ்ட்டில் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறிய உமேஷ் யாதவுக்கு மாற்று வீரராக நடராஜன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன், வரும் 7-ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் 3-வது டெஸ்ட்டில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்கக்கூட வாய்ப்புள்ளது. ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதன் விளைவாக ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் நெட் பவுலராக எடுக்கப்பட்டு, சில பவுலர்களின் காயம் காரணமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பையும் பெற்ற நடராஜன், அந்த போட்டிகளில் அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தவர்.

Similar News