தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் தொடரிலும் விளையாட வாய்ப்பு கிடைக்குமா?
தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் தொடரிலும் விளையாட வாய்ப்பு கிடைக்குமா?
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
பகலிரவு போட்டியாக நடந்த இந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை பெற்றது. முதல் இன்னிங்சில் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தது.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 53 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டும் எடுத்திருந்தது.
90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த படுமோசமான தோல்வியை கண்டு பலரும் இந்திய அணியின் தேர்வினை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் போது பாட் கம்மின்ஸ் வீசிய 21.1 ஓவரின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி களமிறங்கினார்.
அப்போது பாட் கம்மின்ஸ் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் முகமது சமி தவிர்த்து வர, அதில் ஒரு பவுன்சர் பந்தை எதிர்கொண்ட முகமது ஷமிக்கு கை மணிக்கட்டில் அடிபட்டது. இதை தொடர்ந்து டெஸ்ட் தொடரில் இருந்து சமி விலகிய உள்ளார்.