இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்ட படி நடக்குமா? - புதிய சிக்கல்.!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்ட படி நடக்குமா? - புதிய சிக்கல்.!

Update: 2020-11-18 12:29 GMT


ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியா தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று தற்பொழுது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்கள் இந்தியா அணி மூன்று விதமான தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது.

மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் சரியான பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பான முறையில் இந்த தொடர் நடைபெற உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவாக அடுத்த மாதம் 17ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டி நடைபெறுவதற்கான மைதானத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த போட்டியை காண மைதானத்திற்கு ரசிகர்கள் வர அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அளவு அதாவது 25 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

ஆனால் தற்போது இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்பது போன்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் தெற்கு ஆஸ்திரேலியாவில் தற்போது ஐந்து பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில்தான் அடிலெய்டு மைதானம் இருக்கிறது.

இதன் காரணமாக போட்டி நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அடிலெய்டு டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை வீரர்களின் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் நாங்கள் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.

Similar News