உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் சரீன்!

Update: 2022-05-20 05:48 GMT

உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை நிகாத் சரீன். இவர் தாய்லாந்து நாட்டு வீராங்கனையை இறுதிச் சுற்றில் வீழ்த்தி வாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கி நாட்டில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நிகாத் சரீன் தங்கப்பதக்கம் வென்று தற்போது சாதனை படைத்துள்ளார்.

இவர் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், அரையிறுதியில் பிரேசிலின் கரோலின் டி அல்மிடாவை எதிர்கொண்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரீன், 50 என்ற கணக்கில் வெற்றியை ஈட்டி இறுதிப்போட்டிக்கு நுழைந்தார். அதன் பின்னர் தங்கப்பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் ஜிட்பாங்க உடன் இன்று பலப்பரீட்சையில் ஈடுபட்டார் நிகாத் சரீன்.

அதன்படி முதல் சுற்றில் நிகாத் சரீன் மற்றும் தாய்லாந்தின் ஜூடாமாஸ் ஜிட்பாங் உள்ளிட்டோர் ஒருவருக்கு ஒருவர் சராமாரியாக தனது குத்துக்களை வீசினர். இதில் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டி ஆரம்ப முதலே நிகாத் முன்னிலையிலேயே தொடர்ந்து வந்தார்.

மேலும், ஐந்து நடுவர்களும் சண்டையை 109 என்கின்ற கணக்கில் முதல் இரண்டு சுற்றுகளில் நிகாத்துக்கு ஆதரவாக மதிப்பெண் கொடுத்தனர். இறுதி சுற்றின்போது முன்னிலை வகித்தார். நடுவர்கள் 50 என்கின்ற கணக்கில் ஏகமனதாக நிகாத் வெற்றி பெற்றார் என்பது அறிவிக்கப்பட்டது. இதனால் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இவரது வெற்றிக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News