16 பதக்கங்களை வென்ற இந்திய மல்யுத்த வீரர்கள்: பிரதமர் பாராட்டு!
உலக சாம்பியன் பட்டப் போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு பிரதமர் பாராட்டு.
20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்ட போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற ஆடவர் மற்றும் மகளிர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தலா 7 மற்றும் கிரேக்கோ-ரோமன் பிரிவில் 2 இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இன்றைய இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. விளையாட்டில் மட்டுமில்லாது வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்கும் அவர்களை மேலும் ஊக்கப் படுத்துவதற்கும் மத்திய அரசு எப்பொழுதும் தவறியது கிடையாது.
அந்த வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "நமது மல்யுத்த வீரர்கள் மீண்டும் நமக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்டப் போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள். இது இந்தியாவின் மிகச் சிறப்பான செயல்பாடு. எதிர்கால இந்திய மல்யுத்தம், பாதுகாப்பான கரங்களில் இருப்பதை இது உணர்த்துகிறது" என்பவர் பதிவிட்டுள்ளார்.
எனவே எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது. எனவே அத்தகைய இளைஞர்கள் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமாக இருந்து வருகின்றது. 16 பதக்கங்களை வென்று வந்த இந்திய மல்யுத்த வீரர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Input & Image courtesy:PIB