அடுத்தது உலக கோப்பை கிரிக்கெட்: தீவிர பயிற்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சென்னையில் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடக்கிறது. அதற்கு முன்பாக தற்போது உள்ளூரில் உள்ள சீசன்களில் ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட வேண்டியிருக்கிறது. இதில் எட்டு ஆட்டங்களில் விளையாடி விட்டு கடைசி தொடர் நேற்று அமைந்து இருக்கிறது. நிறைய விஷயங்கள் எங்களுக்கு தற்போது தெளிவு கிடைத்து இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து அதை வடிவுபடுத்த வேண்டியதும் முக்கியம் குறிப்பாக உலகக்கோப்பை மிகப்பெரிய போட்டி இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கிறது. வெவ்வேறு கால நிலைகளுக்கு ஏற்ப ஆட வேண்டி இருப்பதால்தான் தற்போது பரிசோதனை முயற்சியாக ஆடும் லெவலில் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கிறோம் என்று அவர் தெரிவது இருக்கிறார். மேலும் மாற்றம் செய்யும் பகுதியில் அணியின் வீரர்கள் 18 பேர் அடையாளம் கண்டு அதில் சிலர் காயத்தில் இருந்து மீண்டு வர வேண்டிய ஒரு சூழ்நிலை தற்போது இருக்கிறது.
துரதிஷ்டவசமாக ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தின் காரணமாக இந்த போட்டியில் விளையாட முடியாமல் போனது. அனேகமாக அவர் நான்காவது வரிசையில் விளையாடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இப்பொழுது அவர் இல்லாததால் சூரியகுமார் அந்த வரிசையில் விளையாடி வருகிறார். இவர் நிறைய டி20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார். ஐ.பி.எல்லில் மட்டும் பத்து ஆண்டுகள் விளையாடி இருக்கிறார், அதே சமயம் அவர் ஒரு நாள் கிரிக்கெட் அதிகமாக விளையாடுவதில்லை. எனவே அவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி பயிற்சிகளை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
Input & Image courtesy: News