10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா VS பாகிஸ்தான் மோதல்: ஏற்பட்ட சிக்கல்?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வர இருக்கிறதா?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கப்பட இருக்கிறது என்று பல்வேறு செய்திகள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக போட்டிக்கு இடமாக 12 நகரங்கள் தேர்வாக இருக்கிறது. இதில் சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் 13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது.
இதற்கு முன்பு இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா இந்த உலகக்கோப்பை போட்டி முதல் முறையாக தனித்தே நடக்க இருக்கிறது. போட்டிக்காக அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒரு சூழ்நிலையில் இந்த போட்டி அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வழியாக இருக்கிறது. இதற்கு புதிய ஒரு சிக்கல் எழுந்து இருக்கிறது. குறிப்பாக ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடருக்கும் முழுமையான விலக்கு மத்திய அரசு கொடுக்குமா என்பது தற்போது வரை அனுமதி கிடைக்காமல் இருக்கிறது.
அதைப்போல அடுத்ததாக 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு பரம எதிரியான பாகிஸ்தான் உடன் இந்திய அணி நேரடி தொடர்புகளை தவிர்த்து வரும் நிலையில், இந்தியா வருவதற்கு பாகிஸ்தானுக்கு சிக்கல் என்று விசா அனுமதி கிடைக்கும் என்று பல்வேறு கோரிக்கைகளும் எழுந்து இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேரடியாக மோதல்களை எதிர்கொள்ளுமா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. விரைவில் அட்டவணை வழியாகும் வரை இதற்குரிய முடிவு தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
Input & Image courtesy: Puthiyathalaimuraia