இவரால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாது: பலத்த காயமடைந்த வீரர் யார்?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் வில்லியம்சன்.

Update: 2023-04-08 02:23 GMT

கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கனவு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எப்படி ஆவது நாம் இடம்பெற வேண்டும் என்பதுதான். அந்த வாய்ப்பை தற்போது தன்னுடைய காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆபரேஷன் செய்து கொண்ட வில்லியம்சன் இந்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார். ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் அணியில் இடம் பிடித்த கேப்டன் இவர், தற்பொழுது குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது பந்தைப் பிடிக்கும்போது எல்லைக்கோட்டில் தள்ளி பிடிக்கும் முயன்ற பொழுது இவருடைய வலது முழங்காலில் பலத்த காயும் அடைந்தார்.


அதன் பிறகு அவர் பேட்டிங் செய்ய வரவில்லை அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் மாற்றுவீராக களம் இறங்கினார். காயம் காரணமாக இவர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதை எடுத்து அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், காயம் கடுமையாக இருப்பது தெரிய வந்து இருக்கிறது. இதன் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி வில்லியம்சன் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார். இதன் காரணமாக 2 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் ஒரு ஆட்டத்தில் கூட முழுமையாக விளையாட முடியாமல் போனது.


மேலும் இவருக்கு வலது முழங்காலில் தசைநார் கிழிந்து இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு அவருக்கு மூன்று வார காலம் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று தெரிய வந்து இருக்கிறது. ஆனால் வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது இவர் விளையாடுவார் என்ற சந்தேகம் இருந்தது. காயம் பெரிதாக இருக்கின்ற காரணத்தினால் இவரால் விளையாட முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறார் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News