உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்குமா? கிளம்பும் புதிய சர்ச்சை!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மனதில் வைத்து இந்தியா கடுமையாக முயற்சித்தால் மட்டும் தான் கோப்பையை வெல்ல முடியும்.;

Update: 2023-03-25 00:24 GMT

அடுத்து வரும் உலக கோப்பை போட்டியில் மனதில் வைத்து தற்பொழுது ஐ.பி.எல் போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் தங்களுடைய தோல்வியை மறந்து கடுமையாக முயற்சி செய்தால் மட்டும்தான் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மீண்டும் ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியும். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஸ்டேடியத்தில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது. குறிப்பாக இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா நிர்ணயத்தை 270 ரன்கள் நோக்கி ஆடிய இந்திய அணி 248 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இதற்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், .இன்னும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். அடுத்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதியாக நாங்கள் நிறைய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். மேலும் எத்தகைய கடுமையான சவால்களை எதிர் கொண்டாலும் பொறுமையுடன் ஆட வேண்டியது முக்கியமானதாகும். நாங்கள் நல்ல தொடக்கத்தை கண்ட இந்த ஆட்டத்தில் யாராவது ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்று கடைசி வரை விளையாடிருக்க வேண்டும். எனவே ஆட்டத்தில் அனைவரும் பொறுமை, நிதானத்தை கடைபிடித்தால் மட்டுமே வெற்றி என்பதை பெற முடியும் என்று கூறியிருக்கிறார்.


எனவே இந்திய அணியில் தற்பொழுது வீரர்கள் முழுமையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராக வேண்டும். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்தியாவின் முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. மேலும் இந்தியா இதில் வெற்றி பெறுமா? என்று பல்வேறு தகவல்களும் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. அவற்றை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News