உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து!

உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

Update: 2023-01-31 00:59 GMT

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 21 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 14ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. மேலும் இதில் 16 அணிகள் பங்கேற்று லீக் மற்றும் சூப்பர் சுற்றுகளில் மோதிக்கொண்டன. இந்தியாவும் இங்கிலாந்து இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இவர் அணிகளின் மணிமகுடம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஆட்டம் நேற்று நடைபெற்றது.


இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் வந்து வீட்டுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாற்றம் அடைந்தது. இதனால் 68 ரண்களில் சுருண்டது, இந்திய அணி 14 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையிலான உலக கோப்பையும் இந்தியா வென்றது முதல் முறை இதுவாகும்.


ICC T20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் BCCI வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டி பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உலக கோப்பை போட்டியில் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள். கிரிக்கெட் போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களுடைய வெற்றி வருங்கால பல கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும். அந்த அணியின் எதிர்கால வெற்றிக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News