உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.. வெற்றி பெற்றால் 13 கோடி பரிசு...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு 13 கோடி பரிசு.
இரண்டாவது உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தற்போது நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜூன் 7ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியானது ஜூன் 11ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டிக்கான பரிசு தொகை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது முதல் முறையாக அறிவித்து இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அனைத்து சீசனிலும் வழங்கப்படும் பரிசு தொகைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வழங்கப்பட்ட தொகையை இந்த சீசனிலும் வழங்கப்படுவதாக ஐசிசி நிர்வாகம் அறிவித்து இருந்தது. மொத்தமாக இந்த போட்டிக்கு பரிசு தொகையானது 31 ஒன்றரை முக்கால் கோடி என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது இதில் சேம்பியன் பட்டம் வெலும் அணிக்கு 13 கோடியும், இரண்டாவது இடத்தை வெல்லும் அணிக்கு 6 கோடியும் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள தென்னாப்பிரிக்காவிற்கு மூன்று கோடியும், நான்காவது இடத்தை பிடித்திருக்கும் இங்கிலாந்திற்கு இரண்டரை கோடியும், ஐந்தாவது இடத்தை பெற்று இருக்கும் இலங்கை 1 கோடியும், முதல் முறை 6 முதல் 9 இடங்களை குறித்துள்ள நியூஸிலாந்து, பாகிஸ்தான் வங்காளதேச அணிகளுக்கு தலா 82 லட்சமும் பரிசாக வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
Input & Image courtesy:Maalaimalar