உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா.. வெல்லப் போவது யார்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி புதன்கிழமை தொடங்க இருக்கிறது. இந்தப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த ஒரு போட்டிக்காக மோதிக் கொள்ள இருக்கிறது இதில் வெற்றி பெறும் அணி பலத்த வரவேற்பு பெற இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் இதில் வெற்றி காணும் அணிக்கு ஐ.சி.சி நடத்தும் நான்கு வகையான போட்டி சாம்பியன் பட்டத்தை ருசித்த முதல் அணி என்ற ஒரு பெருமையை பெற இருக்கிறது.
இந்த ஒரு வரலாற்று சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு எதிரணி வீரர்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்து தகுந்த முறையில் ஆலோசிக்கப்பட்டு அதற்கு ஏற்று வரையில் ஆட்டங்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கள் எப்படியாவது இந்த ஒரு கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஒருமுனைப்பில் விளையாட்டு தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தங்களுடைய முழுமையான முயற்சிகளையும் ஆற்றலையும் இதில் அவர்கள் வெளிப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் அபாரமாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்பதால் தற்போது வரை அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கும்.
Input & Image courtesy: News