உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சொதப்பிய இந்திய அணி... என்ன ஆனது?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவிடம் திட்டம் எதுவும் இல்லாது முக்கிய காரணமா?
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இங்கிலாந்து நாட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தின் போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் இடம் சிறப்பாக விளையாட முடியாத ஒரு ஆட்டத்தை நம்மால் பார்க்க முடிந்தது. மேலும் இந்திய அணியிடம் எந்த திட்டமும் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. இதனால் தான் அஸ்வின் என்ற மூளைக்கார கிரிக்கெட்டரின் தேவை எழுந்துள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மைதானங்களில் ஆஸ்திரேலிய வீரர்களின் மூளைக்குள் புகுந்து அஸ்வின் ஒரு பாடுபடுத்திவிட்டார் என்றே கூறலாம்.
அந்த வாய்ப்பை இந்திய கேப்டன் ரோகித் சர்மா தாமாவே இழந்துவிட்டார். சூழ்நிலையில் இந்திய அணி மீண்டும் மீள முடியுமா என்ற ஒரு கேள்வி எழுந்து இருக்கிறது முதல் ஆட்டத்தின் போது இப்படி இருந்தால் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலியா அதிகமான ரண்களை எடுப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது. இதில் கேப்டன் ரோகித் சர்மா செய்த தவறு என்றால், அணித் தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்பது மட்டுமே.
ஏனென்றால் டாஸ் யார் வென்றிருந்தாலும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்பார்கள். அதேபோல் ஜடேஜாவை எப்படி பயன்படுத்தப் போகிறோம், எந்த வேகப்பந்துவீச்சாளருடன் பயன்படுத்தப் போகிறோம் என்ற எந்த திட்டமிடலும் ரோகித் சர்மாவிடம் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Input & Image courtesy: News