ஒலிம்பிக் மல்யுத்த போட்டி. அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் !
இந்திய வீரர் பஜ்ரங் புனியா காலிறுதியில் ஈரானைச் சேர்ந்த மோர்ட்டேசா சியாசி செகாவை எதிர்கொண்டார். 21 என முன்னிலைப் பெற்றிருந்த பஜ்ரங்க புனியா, 4.56 நிமிடத்தில் ஈரான் வீரரை கீழே சாய்த்து இரண்டு தோள்பட்டையும் தரையில் இருக்கும்படி அழுத்திப்படித்தார். இதனால் கீழே வீழ்த்திய முறையில் பஜ்ரங் புனியா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன.
இந்திய வீரர் பஜ்ரங் புனியா காலிறுதியில் ஈரானைச் சேர்ந்த மோர்ட்டேசா சியாசி செகாவை எதிர்கொண்டார். 21 என முன்னிலைப் பெற்றிருந்த பஜ்ரங்க புனியா, 4.56 நிமிடத்தில் ஈரான் வீரரை கீழே சாய்த்து இரண்டு தோள்பட்டையும் தரையில் இருக்கும்படி அழுத்திப்படித்தார். இதனால் கீழே வீழ்த்திய முறையில் பஜ்ரங் புனியா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலமாக அவர் அரையிறுதிக்கு தற்போது முன்னேறியுள்ளார். அரையிறுதியின் போது அஜர்பைஜான் வீரர் ஹஜி அலியேவ்ஐ எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Maalaimalar
Image Courtesy: இந்தியா.com
https://www.maalaimalar.com/news/topnews/2021/08/06102216/2889239/Tamil-News-Wrestling-Bajranj-Punia-reached-semi-final.vpf