ஆஸ்திரேலியா தொடரில் இவர் அணியில் சேர்க்கப்படமாட்டார் - ஜாகிர் கான் விளக்கம்.!
ஆஸ்திரேலியா தொடரில் இவர் அணியில் சேர்க்கப்படமாட்டார் - ஜாகிர் கான் விளக்கம்.!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியதை தொடர்ந்து படு தோல்வி அடைந்து பின்தங்கி உள்ளது.
இந்த போட்டிக்கான தோல்வியில் இந்திய பேட்ஸ்மேன்களின் பங்கு அதிகம் என்றே கூறலாம். ஏனெனில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் 2-வது இன்னிங்சில் போது பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, மேலும் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டம் இருந்து வெளியேறியதால் இந்திய அணி 36 ரன்களில் இரண்டாவது இன்னிங்சில் சுருண்டது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வீரர்கள் யாரும் 10 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் பிரிதிவி ஷாவின் ஆட்டம் சர்ச்சையாக மாறியுள்ளது.
ஏற்கனவே அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது அவர் மீது மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் களமிறங்கிய அவர் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆகியும், இரண்டாவது இன்னிங்சில் 4 ரன்கள் எடுத்த நிலையில் எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது அவரின் இந்த ஆட்டத்தை குறித்து பலரும் விமர்சித்து வர இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கான் அவரது ஆட்டம் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் : ப்ரித்வி ஷா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள போட்டிகளில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரது ஆட்டம் படு மோசமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தவறுகளை திருத்திக் கொண்டால் மட்டுமே இனி வரும் தொடர்களில் அவர் இடம்பெறுவார் என்றும் இனி இந்திய அணியில் நிச்சயமாக அவர் சேர்க்கப்பட மாட்டார் என்று தனது கருத்தினை காட்டமாக தெரிவித்துள்ளார்.