அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய தருமை ஆதீனம்..!

Update: 2021-06-03 09:06 GMT

தற்போது தமிழகத்தில் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகமாகி உள்ள நிலையில் தருமபுரம் ஆதீனம் 2  ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார்.

இந்த இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆம் மட தலைவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் திருவையாறு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு. நாகநாதனிடம் வழங்கினார். இவர் வழங்கி இருக்கும் இந்த இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கொரோனா வைரஸால் தவிக்கும் மக்களின் மருத்துவத்திற்கு பயன்படும்.


இதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் இவரது மருத்துவ கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு  100  படுக்கை வசதிகளை அமைத்து கொடுத்தார் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 11 லட்சம் பணத்தை தருமபுரம் ஆதீனம் சார்பாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News