அமலாக்கத்துறை கண்காணிப்பு!! தமிழக அரசியலில் பரபரப்பு!!

Update: 2026-02-27 11:10 GMT

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசியல் களத்தைச் சுற்றி கண்காணிப்பை அதிகரித்துள்ளது. அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு தமிழக அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் இயக்குநராக உள்ள ராகுல் நவீன், தமிழகம் வருகை தர உள்ளார்.


தேர்தல் வரும் நேரத்தில் அமலாக்கத்துறை இயக்குநர் வருவதும், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மண்டல அமலாக்க அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை நடத்த இருப்பதையும் வெறும் அலுவல் பயணமாக மட்டும் கருதிட முடியாது என தி.மு.க-வினர் தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

Similar News