சென்னை: காவல் நிலையம் முன்பு காவலர் தீக்குளிக்க முயன்ற சம்பவம்! ஏன்?

Update: 2022-07-19 02:40 GMT

சென்னை: வேளச்சேரி காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வரும் செந்தில்குமார், காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க  முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அனைத்து அரசு துறைகளிலும் நிர்வாக சீர்கேடுகள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.


அந்த வரிசையில், சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர், காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார்.


கடந்த ஓராண்டாக வேளச்சேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக செந்தில்குமார் பணியாற்றி வருகிறார். இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் எழுத்தர் ஞானசேகர், தனக்கு ஒத்துழைத்து போகும் காவலர்களுக்கு மட்டும் வார விடுப்பு அளிப்பதாகவும், மற்றவர்களுக்கு வார விடுப்பு அளிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.


அந்தவகையில், செந்தில்குமாருக்கு கடந்த சில வாரங்களாகவே வார விடுப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செந்தில்குமார் ஆய்வாளரிடம் புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.


இச்சம்பவம் சென்னை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Full View


Similar News