சென்னை- மன்னார்குடி ரயில் புறப்படும் நேரம் மாற்றம்..!

சென்னை- மன்னார்குடி ரயில் புறப்படும் நேரம் மாற்றம்..!

Update: 2020-12-08 08:38 GMT

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை- மன்னார்குடி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06179), இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சென்னையில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.45 மணிக்கு மன்னார்குடி சென்றடையும்.

ரயில்களின் நேரங்களில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் குழப்பத்திற்கு ஆளாவதாக தகவல் வெளியாகிறது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் ரயில்வே இணையதளம் மற்றும் செயலிகளை டவுன்லோடு செய்து அதன் மூலம் உரிய நேரம் குறித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Similar News