அரசு நிலத்தை ஆக்கிரமித்து இந்துக்களை நுழைய விடாமல் தடுக்கும் அவலம்.!

அரசு நிலத்தை ஆக்கிரமித்து இந்துக்களை நுழைய விடாமல் தடுக்கும் அவலம்.!

Update: 2020-11-30 18:24 GMT

அரசு நிலத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் இந்து மக்களை நடமாடக் கூட விடாமல் விரட்டி அடிக்கும் கொடுமை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, மூலக்கரை ஊராட்சி அருகே உள்ள சிறிய கிராமமான முத்துசாமிபுரத்தில் சுமார் 75 இந்து குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன.

கிராமத்தின் வடக்கு மற்றும் மேற்கே உள்ள பகுதிகளில் அரசுக்கு சொந்தமான 143 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் பல்வேறு கடைகளைக் கட்டி அதற்கான வாடகையை பள்ளிவாசல் வசூல் செய்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் அங்கு இயங்கி வரும் அரசு கட்டிடத்திற்கு கூட பள்ளிவாசல் வாடகை வசூல் செய்து வருகிறது. 

இதில் வடக்கு புறம் உள்ள 70 ஏக்கர் நிலத்தை இந்துக்கள் கால்நடைகளின் மேய்ச்சலுக்காகவும் குழந்தைகள் விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அந்த பகுதிகளில் இந்துக்களை நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர். மீறி வருபவர்களை அவர்கள் விரட்டி அடித்து வருவதாக கூறப்படுகிறது. ஊருக்குள் உள்ள மைதானத்தில் இந்துக்கள் விளையாடுவதற்கு அனுமதி இல்லை என்றும் கூறுகின்றனர்.

அதேபோல் இந்த ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்துக்களுக்கு வீடுகள் வாடகைக்கு கூட கொடுப்பதில்லை. முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமே இந்தப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாடகைக்கும் விட்டு வருகின்றனர். இந்துக்கள் கோவில் கொடை விழாவிற்கு போஸ்டர் ஒட்டினால் அவர்கள் மீது தாக்குதலும் நடத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

1500 முஸ்லிம் குடும்பங்கள் அங்கு உள்ள 75 இந்துக்களை மிரட்டி ஒடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பிரச்சனையை சாதி அமைப்புகளின் தலைவர்களிடம் முறையிட்டால் அவர்களும் முஸ்லிம்களுக்கு பயந்து மௌனம் காப்பதாக இந்து மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் பிரச்சினையை போக்குவதற்காக இந்து முன்னணி களமிறங்கியுள்ளது.

 இந்து முன்னணியின் துணைத் தலைவர் ஜெயக்குமார் வழிகாட்டுதலின் பேரில் இந்து வழக்கறிஞர் முன்னணியின் உண்மை கண்டறியும் குழு தலைமையில் முத்துசாமிபுரத்திற்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். இதற்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்ததாகக் கூறப்படுகிறது.

இதை மீறி மக்களிடம் நிலைமை குறித்து விசாரித்த இந்து முன்னணியினர் ஸ்ரீவைகுண்டம் தாசில்தாரை நேரில் சந்தித்து அவரிடம் அந்த இடம்  சம்பந்தமாக அரசு ஆவணங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

பிறகு இந்த உண்மை அறியும் குழுவின் ஆய்வறிக்கையை தமிழக முதலமைச்சர், காவல் துறை இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் குதிப்போம் என்று இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News