பொங்கல் பண்டிகை.. அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.!
பொங்கல் பண்டிகை.. அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.!
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்காக அரசுப் பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது.
சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகை அன்று வெளிமாவட்டத்துக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சிறப்பு பேருந்தகளை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப் பேருந்துகளில், 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு தொடங்குகிறது. இதனிடையே ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி பொங்கல் பண்டிகைக்கான அரசுப் பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது குறைந்த அளவு பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.