தஞ்சாவூரில் காணாமல் போன அரிய ஓவியம் அமெரிக்காவில் - யார் காரணம்?
தஞ்சை ஆண்ட சரபோஜி மன்னர் இருக்கும் அரிய ஓவியம் தற்பொழுது அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை ஆண்ட சரபோஜி மன்னர் இருக்கும் அரிய ஓவியம் தற்பொழுது அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் அரண்மனை பகுதியில் சரஸ்வதி மஹால் நூலகம் உள்ளது, அங்கு பழங்கால ஓலைச்சுவடிகள், மன்னர் கால கலை பொக்கிஷங்கள் என ஏராளமான பொருட்கள் உள்ளன. இந்த கலை மத்தியில் சரஸ்வதி மகாலில் தஞ்சை ஆண்ட மன்னர் சரபோஜி அவரது மகனுடன் இருக்கும் அழகிய ஓவியம் வைக்கப்பட்டிருந்தது.
தங்க நிறத்தில் மின்னும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியத்தை காணவில்லை என 2017 ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் சிலை தடுப்பு காவல் பிரிவில் புகார் அளித்திருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இதன் தொடர் விசாரணையில் எந்த ஓவியம் 1822 மற்றும் 27 க்கு இடையே வரையப்பட்டது எனவும் 2011ல் கைது செய்யப்பட்ட சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் என்பவரால் திருடப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டது என்ற விவரத்தையும் போலீஸர் கண்டுபிடித்தனர்.
எந்த நிலையில் இந்த ஓவியத்தை அமெரிக்காவில் உள்ள பெம் எனப்படும் அருங்காட்சியகம் வாங்கி வைத்திருப்பதும் இந்த ஓவியம் அமெரிக்காவின் ஹோம் லேண்ட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன் அதிகாரியிடம் ஒப்படைத்திருப்பதையும் சிலை தடுப்பு காவல் பிரியினர் கண்டறிந்தனர், மேலும் அந்த ஓவியம் அவர்களுடன் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் தற்பொழுது இந்த ஓவியத்தை திரும்ப இந்தியாவிற்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.