மாணவர்கள் பழைய பாஸ்களையே பயன்படுத்தலாம்.. போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்.!

மாணவர்கள் பழைய பாஸ்களையே பயன்படுத்தலாம்.. போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்.!

Update: 2020-12-07 19:34 GMT

கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 2ம் தேதி முதல் ஆராய்ச்சி மற்றும் முதுகலை 2ம் ஆண்டு, மாணவ மாணவிகளுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளேடு இளங்கலை இறுதியாண்டு மாணவிகளுக்கும் கல்லூரிகள் துவங்கியது.

இந்நிலையில் தான், இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டது. பல மாதங்களுக்கு பின்னர் கல்லூரிக்கு செல்வது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தமிழகத்தில் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், பழைய பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Similar News