"பிரதமர் வருகிறார், எதிர்ப்பு கூடாது!" - சாட்டையை சுழற்றும் சென்னை கமிஷனர்
பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் உடனடி கைது என சென்னை கமிஷனர் எச்சரிக்கை செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் உடனடி கைது என சென்னை கமிஷனர் எச்சரிக்கை செய்துள்ளார்.
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதுக்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார் முன்னேற்றே நடவடிக்கையாக பாதுகாப்பு பணியை ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் வருகை தந்தார்.
பின்ன செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால் கூறும் பொழுது ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பானது ஏழு மடங்கு அதிகரிக்கப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், 'பிரதமர் வரும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். பாதுகாப்பு ஏற்பாடு கருதி எப்போது மக்கள் வழக்கம் போல் செல்லலாம் குறிப்பாக நேரு விளையாட்டரங்கம் அருகில் உள்ள சாலைகளில் சிறப்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்' என்றார்.
மேலும் மோடி பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டு இருந்தாலும் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தாலும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்' எனவும் தெரிவித்தார்.