திருஞானசம்பந்தரை கொலைகாரர் என்று கூறிய திருமாவளவன் - எந்த முகத்தை வைத்துக்கொண்டு சிதம்பரம் சென்றார்.?
திருஞானசம்பந்தரை கொலைகாரர் என்று கூறிய திருமாவளவன் - எந்த முகத்தை வைத்துக்கொண்டு சிதம்பரம் சென்றார்.?
இந்து மக்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திருமாவளவனைப் பற்றி புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய திருமாவளவன், கிருபானந்த வாரியாரைப் பற்றி யாரோ பேசியதை தான் கேட்க நேர்ந்ததாகவும், அதில் திருஞானசம்பந்தரின் பெற்றோர் பற சமயங்கள் இரண்டையும் வீழ்த்த வல்ல மகனை தந்தருள வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டதாக குறிப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.
இங்கு பற சமயங்கள் என்று சமணத்தையும் பௌத்தத்தையும் கூறுவதாகக் திருமாவளவன் பேசியுள்ளார். "சமணத்துக்கும் புத்தத்துக்கும் 'பறச் சமயம்' என்ற சொல்லாடலை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்" என்று கூறும் அவர், திருஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப்பால் கொடுத்ததைப் பற்றி கிருபானந்த வாரியார் கூறியதை விவரிக்கிறார்.சமணத்தையும் புத்த மதத்தையும் ஒழிக்கவே திருஞானசம்பந்தர் பிறந்ததாகவும் அதற்காகத்தான் அவர் மதுரைக்குச் சென்றதாகவும் கிருபானந்த வாரியார் குறிப்பிடுவதாக கூறும் திருமாவளவன், "அவர் பாடித் தான் எண்ணாயிரம் சமணர்களை கழுவிலேற்றி கொலை செய்கிறார்கள்." கழுவேற்றம் பற்றி விவரித்து விட்டு "இவ்வளவு கொடூரமான கொலைகளைச் செய்திருக்கிறார்கள்" என்று பேசி இருக்கிறார்.
இதனால் பழைய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், "ஞானசம்பந்தர் பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள தீயசக்தி சமூக விரோதி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கவனத்துக்கும் இது சென்ற நிலையில், திருமுறை போன்ற சைவத் திருமுறைகள் பற்றி திருமாவளவனுக்கு எதுவும் தெரியாது என்பதையே இது காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.