சென்னை ஐஐடியில் கொரோனா அதிகரிக்க இதுதான் காரணமாம்.. பிற கல்லூரி மாணவர்களுக்கும் இதுதான் கதி.!
சென்னை ஐஐடியில் கொரோனா அதிகரிக்க இதுதான் காரணமாம்.. பிற கல்லூரி மாணவர்களுக்கும் இதுதான் கதி.!
சென்னையில் உள்ள ஐஐடியில் மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இது எப்படி நடந்தது என்று மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
அதாவது கொரானா வைரஸ் எவ்வாறு வேகமாக பரவியது என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சென்னை ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நேற்று ஒரே நாளில் 32 மாணவர்களுக்கும், இன்று ஒரே நாளில் 33 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்ட நிலையில், ஐஐடி மெட்ராஸ் இது போன்ற ஒரு நிலையை சந்திக்க வேண்டியது. பிற கல்லூரிகளுக்கு ஒரு பாடம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக கூறியிருந்தார். சென்னை ஐஐடி மாதிரியே, பிற கல்லூரிகளிலும் கொரோனா பரவ வாய்ப்பு-ள்ளதால் சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். ஐஐடியில் மாணவர்கள், பணியாளர்கள் உட்பட 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எங்கிருந்து பாதிப்பு துவங்கியது என்பது பற்றி உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் எளிதாக மற்றவர்களுக்கு பரவியது எப்படி என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி ஆய்வு மாணவர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ஊரடங்கு காரணமாக குறைந்த அளவு மாணவர்கள் இருக்கும் போது இங்கு ஒரு மெஸ் இயங்கி வந்தது போதுமானதாக இருந்தது. தற்போது மாணவர்கள் அதிக அளவு வந்த பின்னரும் இங்கு ஒரு மெஸ் மட்டுமே இயங்கி வருகிறது. அதில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும்.