நாட்டை உலுக்கிய நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து! முப்படைகளின் தளபதி சேவையின் போதே வீர மரணம்!
13 dead after Army helicopter carrying defence chief Bipin Rawat crashes
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட பயங்கர விபத்தில், பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக ANIசெய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது .
ஒருவர் ஆபத்தான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் 14 பேரில் 11 பேர் பலியாகியுள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். அடர் மூடுபனி காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக அமைச்சர் தெரிவித்தார்.
தீயணைப்புப் படையினரும் உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விபத்து நடந்த இடம் குறுகியதாக இருப்பதால், அவர்கள் அதிக எண்ணிக்கையில் நடமாடுவதில் சிரமம் இருப்பதாக ராமச்சந்திரன் கூறினார்.
14 பேரில் ஜெனரல் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத், பிரிக் எல்எஸ் லிடர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், நாயக் குர்சேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் விவேக் குமார், லான்ஸ் நாயக் பி சாய் தேஜா மற்றும் ஹவல்தார் சத்பால் ஆகியோர் அடங்குவர்.
இந்த விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கம் அளித்தார். ஜெனரல் ராவத்தின் இல்லத்திற்கும் சென்று பார்வையிட்டார். விமானப்படை தலைமை ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி விபத்து நடந்த இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் சூலூர் IAF தளத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு (DSC) சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.