கல்லூரியில் மதமாற்றம்! இந்து மாணவர்களின் நறுக் நறுக் கேள்விகளுக்கு ஓடி ஒளியும் உமா சங்கர் ஐ.ஏ.எஸ் - வைரலாகும் வீடியோ..!

Pon Jesly Engg College Umashankar IAS

Update: 2021-10-13 03:03 GMT

அரசு அதிகாரி என்ற போர்வையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மதமாற்றத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது. தனிப்பட்ட முறையில் இல்லாமல் பொது இடத்தில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டது மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்ததும் மதபோதனை செய்ததும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அதையடுத்து தமிழ்நாடு அரசு உமாசங்கரை கண்டித்தது. மேலும் இது போன்று அவர் தொடர்ந்து செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அவருக்கு அறிவுறுத்தி இருந்தது.

அதன் பிறகும் தன்னை மாற்றிக்கொள்ளாமல், மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக பணியில் இருந்த உமாசங்கர் மதப் பிரச்சாரம் செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அவர் மத போதனை செய்துள்ளார். பிறகு தங்கியிருந்த இடத்திலும் இதேபோன்று மதப் பிரச்சாரம் செய்வதாக புகார்கள் எழுந்தன.

இப்படி தொடர்ச்சியாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் அவர் வெளிப்படையாக மாணவர்கள் மத்தியில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மாணவர்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.


Full View














Similar News