வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் அலட்சியம் - பீகாரின் சிராக் பஸ்வான் வெளியிட்ட பகீர் தகவல்!
வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பேச வந்த லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வானுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்க்க நேரம் ஒதுக்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநில தொழிளார்கள் விவகாரம் இந்திய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது, மற்ற மாநிலங்கள் தமிழகத்தை உற்று பார்க்கும் அளவிற்கு இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் இதில் அரசியல் புகுந்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்தி பரவியதை தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் ஊருக்கு செல்கிறார்கள் என சர்ச்சை நிலவியது. இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு போனது, இரு மாநில அரசுகளும் பதற்றம் அடைந்த நிலையில் காவல்துறை மற்றும் மீடியாக்கள் அனைவரும் சேர்ந்து வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை தணிக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வட மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள்தான் உணவகம், கட்டிட வேலை, தொழிற்சாலைகள் இது போன்ற உடலுழைப்பு தேவைப்படும் இடங்களில் அதிகமாக வேலை செய்கின்றனர்.தமிழகத்தில் பல நிறுவனங்களை வாழ வைக்கிறது. இவர்கள் தமிழ் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் செய்யும் வேலையை விட அதிக வேலையையும், தமிழக தொழிலாளர்களை விட வட மாநில தொழிலாளர்கள் குறைந்த அளவு கூலி வாங்குவதும் இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிட்டால் தமிழகத்தில் பெரும்பாலான தொழில்கள் படுத்துவிடும், பல்வேறு உணவகங்கள் பணியாளர்கள் இல்லாமல் மூடும் நிலைக்கு சென்றுவிடும் என பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பேச வந்த லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் வடமாநில தொழிலார்கள் குறித்து பீகார் மாநிலத்தில் இருந்து விவரம் சேகரித்து இரு மாநிலத்திற்கும் அமைதி ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் வந்த அவர்.முதலமைச்சர் ஸ்டாலின் பார்க்க நேரம் ஒதுக்கவில்லை என கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசிய பிறகு லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பீகார் மக்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து விசாரணை நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததாக கூறினார்.