அஸ்ஸாமில் விரைவில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கமா! - அமித்ஷா கூறியதென்ன?

விரைவில் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

Update: 2022-05-11 12:15 GMT

விரைவில் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.


வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் வன்முறைகளை தடுக்கும் விதமாக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது. திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஏ.எப்.எஸ்.பி.ஏ நீக்கப்பட்டுள்ளது அசாமில் 23 மாவட்டங்களில் மட்டுமே ஏ.எப்.எஸ்.பி.ஏ நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், சந்தேகப்படும் வகையில் உள்ளவர்கள் போன்றவர்களை வாரண்ட் ஏதுமின்றி விசாரணை நடத்தவும் சுட்டு தருவதற்கும் கூட ராணுவத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்த நிலையில் விரைவில் அஸ்ஸாம் மாநிலத்தில் முழுவதும் இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அஸ்ஸாமில் பேசிய உள்துறை அமைச்சர் கூறியதாவது, '1990 முதல் இந்த சட்டம் அமலில் உள்ளது இடையில் ஏழுமுறை இந்த சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது ஆனால் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை காரணமாக அசாமில் 23 மாவட்டங்களில் இந்த சட்டம் நீக்கப்பட்டு உள்ளது விரைவில் மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்படும் என நான் நம்புகிறேன்' என கூறினார்.

இதற்கு முன் சில நாட்களுக்கு முன் அஸ்ஸாம் வந்திருந்த பிரதமர் மோடி அசாமை தொடர்ந்து நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்படும் என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Source - Junior Vikatan





 


Similar News