இவர்களுக்குத்தான் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது கொரோனா ! ICMR ஆய்வு முடிவு !

சுகாதாரப் பணியாளர்கள் தான் இந்த கொரோனா காரணமாக மனதளவில் பாதிப்பை பெற்றவர்கள்- ICMR ஆய்வு தகவல்.

Update: 2021-09-18 13:20 GMT

உலகமே இதுவரை எதிர் கொண்டிராத ஒரு வைரசுக்காங்க பெரும் பாதிப்பை மன அழுத்தத்தைப் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக அதிகமான வேலைப்பளு, அழுத்தம், பிரச்சினைகளைச் சமாளிப்பது, கூடுதலாகப் பொறுப்புகள், புதுவிதக் கட்டுப்பாடுகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றால் சுகாதாரப் பணியாளர்கள் உளவியல் ரீதியான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ICMR ஆய்வு தெரிவிக்கிறது. ICMR நடத்திய இந்த ஆய்வின் அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  


இந்த ஆய்வைப் பற்றி ICMR மேலும் கூறுகையில், "கொரோனா வைரஸ் பெருந்தொற்று சுகாதாரப் பணியாளர்களுக்கு மனரீதியான பிரச்சினைகளை அதிகம் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நோயாளிகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் மீதான அவதூறுகள், தாக்குதல்கள் குறித்து சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மூலம் வரும் செய்திகள், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம், கிடைக்கும் அனுபவங்கள் பெரும் உளவியல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மணிக்கணக்காக நேரம் பார்க்காமல் வேலை செய்ததன் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் மன அழுத்தம், பதற்றம், அச்ச உணர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.


நிர்வாக ரீதியிலும், பணிபுரியும் இடத்திலும் திடீரென ஏற்பட்ட மாற்றங்களும், அதற்குத் தங்களை உட்படுத்திக் கொள்வதிலும் சுகாதாரப் பணியாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்கள். அதிலும் குறிப்பாக நோயாளிகளை பார்க்கும் பொழுது, சமூக விலகல், முழு கவசம் ஆடை அணிதல், கூடுதல் ஷிப்ட்கள், நேரம் பணிபுரிதல் போன்றவற்றுக்கு அவர்கள் முன்கூட்டியே தயாராகவில்லை. நீண்டநேரம் பணியாற்றும் கலாச்சாரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகளையும், மேலும் தூக்கமின்மையையும் ஏற்படுத்தின. தங்கள் குடும்பங்களுடன் நேரம் செலவிட முடியாமல் இவர்களுக்கு மனதளவில் காயங்களை ஏற்படுத்தியதுஎன்றும்" என்றும் அந்த அறிக்கை ஆய்வு முடிவு கூறுகிறது.  

Input & Image courtesy:business-standard





Tags:    

Similar News