பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கச் சொல்லும் பாதிரியார்கள் - உண்மையை போட்டுடைத்த மதபோதகர்!

Update: 2021-05-07 00:45 GMT

கிறிஸ்தவ மத போதகர்கள் அரசியல்வாதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு பணம் கொடுத்த கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வலியுறுத்துவதாக மதபோதகர் மோகன் சி லாசரஸ் பேசி உள்ளது தற்போது வெளியாகியுள்ளது.


கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிறு தோறும் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த கூட்டங்களில் கிறிஸ்துவை வழிபடுகிறார்களோ இல்லையோ இந்து கடவுள்களை இழிவு படுத்தியும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை மக்களிடையே பொய்யாக பிரச்சாரம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு ஞாயிறு நடைபெறும் கூட்டங்களில் கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கூட அங்கு இருக்கும் பாதிரியார்கள் வலியுறுத்துவதை நாம் பார்த்திருக்கின்றோம்.

ஞாயிறு நடைபெறும் ஜெப கூட்டங்களில் சில மதபோதகர்கள் அரசியல்வாதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அரசியல்வாதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு சில பாதிரியார்கள் ஜெப கூட்டங்களில் கிறிஸ்தவர்களை குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருவதாக மதபோதகர் மோகன்சிலாசரஸ் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஞாயிறு ஜெப கூட்டங்களில் பாதிரியார்கள் சிலர் மதசார்பற்ற கட்சிகளாக தங்களைக் அடையாளம் காட்டிக் கொள்ளும் சில கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு பாஜக அரசை பற்றி அவதூறாக கிறிஸ்தவ மக்களிடையே பரப்பி வருகின்றனர் என்பதை பல முறை நமது செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதையே தற்போது மதபோதகர் மோகன்சிலாசரஸ் தெரிவித்துள்ளது கிறிஸ்தவ பாதிரியார்களிடம் போதனைகளை கேட்டு தவறாக வாக்களித்தவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக கிறிஸ்தவர்கள் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பொய்யாக பரப்பப்படும் செய்திகளை நம்பி அதை பலருக்கு பகிர்ந்து வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே சிறுபான்மையினருக்கு அதிக நன்மைகள் செய்யும் அரசாக பாரதிய ஜனதா அரசு திகழ்ந்து வருகிறது என்பதை கூடிய விரைவில் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Similar News