ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பு!!

Update: 2026-03-16 12:04 GMT

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது. ஈரான் கடல் எல்லையை ஒட்டியுள்ள இந்த ஜலசந்தி வழியாகவே ஆசிய நாடுகளுக்கு 85% கச்சா எண்ணெய் மற்றும் சமையல் காஸ் ஏற்றுமதி நடக்கிறது.


அமெரிக்கா-ஈரான் பதற்றத்தால் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதனால் இந்தியாவில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண பிரதமர் மோடி, ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முலம், ‘ஷிவாலிக்’, ‘நந்தாதேவி’ கப்பல்கள் சுமார் 1 லட்சம் டன் சமையல் காஸுடன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்தன.


பெர்சியன் வளைகுடா பகுதியில் 22 இந்திய எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன, அவை பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த கப்பல்கள் இன்று அல்லது நாளை குஜராத் செல்லும்.

Tags:    

Similar News