மழையால் ஆற்றில் உடைப்பு - மக்களுக்கு உதவ களத்தில் இறங்கிய எம்.ஆர்.காந்தி!

Update: 2021-05-16 09:45 GMT

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. நாகர்கோயில் தொகுதி மேலசங்கரன்குழி பஞ்சாயத்தில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக களத்தில் இறங்கிய நாகர்கோவில் தொகுதி பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





நாகர்கோவிலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேலசங்கரன்குழி பஞ்சாயத்தில் இருக்கும் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்ட எம்.ஆர். காந்தி உடனடியாக ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டார்.







அப்போது ஊர் மக்களிடம் அவர்களது குறைகளைக் கேட்டு தெரிந்து கொண்ட அவர் அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த ஒருவர் "எப்போதும் மக்கள் உயிர், மக்கள் நலன் என்று இருக்கிறார். அதிகாரிகளை பார்த்து அடம்பிடித்து பழுதான இடங்களுக்கே அதிகாரிகளை இழுத்து சென்று நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தொகுதி எம் எல் ஏ எம்.ஆர்.காந்திக்கு எனது நன்றி" என்று பதிவிட்டிருக்கிறார்.

இது போன்ற எம்.எல்.ஏ. கிடைத்ததற்கு நாகர்கோவில் தொகுதி மக்கள் புண்ணியம் செய்துள்ளார்கள் என்று மற்றொரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கின்றதா என்று ஆய்வு செய்து பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் அதை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக மகேந்திர கிரியில் இருந்து நேரடியாக தனது தொகுதியில் உள்ள மருத்துவ ஆக்சிஜன் பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News