பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசிய திமுக அமைச்சர் - அதிர்ச்சியில் ஜெயின் சமூகத்தினர்!
சென்னையில் வசித்து வரும் வட மாநிலத்தவர் வசதியாக வாழ்வதற்கு வழி வகுத்துக் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவர்கள் வாக்கு செலுத்தாமல் பாரதிய ஜனதாவிற்கு செலுத்தி வருகிறார்கள் என்று நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசி உள்ளதால் அங்கு கூடியிருந்தவர்கள் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்
மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை மெட்ரோ இயக்கம் சார்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு, முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவை தொடங்கி வைத்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் இந்த தொகுதியில் இருக்கும் வடமாநிலத்தவர்கள் வசதியாக இருப்பதற்கு காரணம் இங்கு திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்தது தான் காரணம். ஆனால் அவர்கள் திமுகவிற்கு வாக்களிக்காமல் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்கின்றனர்.
ஆனால் நாங்கள் வாக்கு சேகரிக்க செல்லும்போது நாங்கள் உங்களுக்கு தான் வாக்களிக்கிறோம் என்று கூறுகிறார்கள். இந்த தொகுதியில் மொத்தம் 50 வாக்குகள் மட்டுமே திராவிட முன்னேற்ற கழகத்திற்கு விழுந்துள்ளதாகவும் மற்ற 350 வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எழுந்துள்ளதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.
மேலும் 2014, 2016, 2019 மற்றும் 2021 தேர்தல்களில் இந்த தொகுதியில் உள்ள வடமாநிலத்தவர்கள் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காமல் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து உள்ளனர் என்று தெரிவித்தார். நீங்கள் எங்களை எவ்வளவு புறக்ணித்தாலும் நாங்கள் உங்களை புறக்கணிக்க மாட்டோம் என்று கூறிய அவர், "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்ற திருக்குறளை தெரிவித்து அங்கு கூடியிருந்த மக்களை சங்கடத்திற்கு உள்ளாக்கினார்.