கப்பலேறிய மானம் - சர்வதேச அளவில் தமிழகத்தின் பெயரை கெடுக்கும் முதல்வர் ஸ்டாலின்!

Update: 2021-06-10 02:13 GMT

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்றபோது ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் யார் அந்த ஸ்டாலின் என்று வியப்பில் இணையத்தில் தேடியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் வெளிநாட்டு மருத்துவர் முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து உலகமே யார் அந்த ஸ்டாலின் என்று தற்போது தேடிக்கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய ஊடகமான ஸ்கை நியூஸ் விவாதத்தில் பங்கேற்ற கிரெய்க் கெல்லி என்ற ஆஸ்திரேலிய எம்.பி, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா தொற்று குறைவாக இருப்பதாகக் கூறிய அவர் பெரும்பாலான மாநிலங்கள் ஐவர்மெக்டின் என்ற மருந்தை பயன்படுத்தி வருவதாகவும், ஆனால் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் மட்டும் ஐவர்மெக்டின் பயன்பாட்டை தடை செய்துள்ளது என்றும் கூறினார்.

இவ்வாறு கூறும் போது, "அந்த மாநிலத்தில் புதிதாக ஸ்டாலின் என்று ஒருவர் முதல்வராகி இருக்கிறார். ஆம்! மக்கள் 'ஸ்டாலின்' என்ற பெயர் கொண்ட ஒருவருக்கு வாக்குச்சாவடிக்குப் போய் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்" என்று நக்கலாகக் கூறியது தான் இப்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. "People actually went to the ballot boxes and voted for a bloke named Stalin" என்று அவர் கூறியதை தொடர்ந்து bloke என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கூகுளில் தேடல்களும் அதிகரித்து வருவதாகவும் மீம்ஸ்கள் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன.

இதேபோன்று பியர் கோரி என்ற மருத்துவரும் பிரெட் வெயின்ஸ்டைன் என்ற ஆய்வாளரும் கொரோனா பெருந்தொற்று பற்றி மேற்கொண்ட கலந்துரையாடலில், "இந்தியாவில் நிலைமை மிக மோசமான போது அவர்கள் ஐவர்மெக்டினை பயன்படுத்தத் தொடங்கினார்கள். மருத்துவர்களின் தலைமை அமைப்பான ஐசிஎம்ஆர் மற்றும் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை முறையில் ஐவர்மெக்டினை அறிமுகப்படுத்தினார்கள். அனைத்தையும் விட முக்கியமாக கோவா மாநிலத்தின் சுகாதார அமைச்சர் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 5 நாட்களுக்கு ஐவர்மெக்டினை உட்கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்."

"அதைப் பார்த்த போது நான் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருந்திருந்தால் இதைத்தான் செய்து இருப்பேன் என்று எனக்கு தோன்றியது. கோவா உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த மருந்தை உபயோகப்படுத்தின. அதன் பிறகு பார்த்தால் தோற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. ஆனால் இந்தியாவில் தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இருக்கிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஐவர்மெக்டினை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து விட்டு ரெம்டெசிவிரை பயன்படுத்த உத்தரவிட்டார். அந்த மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது."

"ஏன் என்று தெரியவில்லை அவரது பெயர் மு.க ஸ்டாலின். நான் இதைச் சொல்லியே ஆகவேண்டும். இந்தியாவில் இந்த ஸ்டாலின் ஐவர்மெக்டினை தடை செய்துள்ளார். அங்கு இப்போது நிலைமை மிக மோசமாக உள்ளது" என்று அந்த மருத்துவர் பேசியிருக்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவா போக்குவரத்து துறை அமைச்சரை வாயை மூடு என்று திமிராக கூறிவிட்டு கோவா மக்களின் மேல் உள்ள அக்கறையால் தான் பேசினேன் என்று தமிழக நிதியமைச்சர் ஒருபுறம் சமாளித்துக் கொண்டு இருக்கிறார்.

மறுபுறம் "எனது தொகுதி அளவுக்குத்தான் இருக்கும்" என்று திமுகவினர் கோவாவை சிறுமைப்படுத்தி பேசிய போதும், உலக அளவில் கோவா பாராட்டுகளை பெறுகிறது. ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினோ "போயும் போயும் இவனுக்கா" ஓட்டுப் போட்டார்கள் என்று வெளிநாட்டவர்கள் கூட தமிழக மக்களை எண்ணி வேதனைப்படும் அளவு பெயர் பெற்றிருக்கிறார்.


Similar News