ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் : வேற லெவலில் மாஸ் காட்டிய தமிழகம் - அண்டை மாநிலங்களை பிரம்மிக்க வைத்த முன்னேற்றம்!

Update: 2021-07-27 01:15 GMT

ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையின் கீழ் தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மத்திய அரசின் முன்னணி திட்டமாகும். வலுவான பொருளாதார சூழலை உருவாக்கவும், புத்தாக்கத்தை வளர்ப்பதும் தான் இதன் நோக்கம். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் நிலையான பொருளாதார வளர்ச்சியையும், அதிகளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கை, தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.

2018ம் ஆண்டில் 4504, 2019-ல் 8213, 2020ம் ஆண்டில் 8628, 2021ம் ஆண்டில் 4982, என மொத்தம் 26,327 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை ( DPIIT) தெரிவித்துள்ளது.

தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்க, தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தின் கீழ், பொருட்களின் தரநிலையை மேம்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

மத்திய அரசு தனது அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் 156 தயாரிப்புகளுக்கு, இந்திய தர நிர்ணய அலுவலகம் (பிஸ்) சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்கியது. உற்பத்தி துறைக்கு ஊக்கம் அளிக்க, அடுத்த 5 ஆண்டுகளில் 13 துறைகளில், ரூ1.97 லட்சம் கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.


 

Similar News