அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதவி விலக வேண்டும்!! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

Update: 2026-01-31 09:37 GMT

சென்னையில் பீகாரைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொறுப்பற்ற முறையில் பேசியதை எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார்.

மேலும் அவர் தமிழ்நாட்டில் தினந்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாக குற்றம் சாட்டிய நிலையில், அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட என்றார்.

நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது என்று கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News