பிரதமர் மோடி திறந்து வைத்த முதல் ரிங் டெல்லி மெட்ரோ ரயில்!!
By : Bharathi Latha
Update: 2026-03-10 09:57 GMT
பிரதமர் மோடி டெல்லியில் இந்தியாவின் முதல் ரிங் மெட்ரோ ரயில் பாதையை தொடங்கி வைத்தார். பிங்க் பாதையின் 12.3 கிமீ நீளமுள்ள மஜ்லிஸ் பார்க்-மௌஜ்பூர்-பாபர்பூர் பாதை மற்றும் மெஜந்தா பாதையின் 9.9 கிமீ நீள தீபாலி சௌக்-மஜ்லிஸ் பார்க் நீட்டிப்பு திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய வழித்தடங்கள் டெல்லி முழுவதும் ஆயிரக்கணக்கான தினசரி பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும். மெஜந்தா பாதை வழித்தடத்தின் சில பகுதிகள் சுமார் 28.36 மீட்டர் உயரத்தில் உள்ளன.
மேலும், டெல்லி மெட்ரோ திட்டத்தின் கட்டம் V(A)-ன் கீழ் சுமார் ரூ.33,500 கோடி மதிப்புடைய மூன்று புதிய வழித்தடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பிரதமர் மோடி சரோஜினி நகரில் புதிதாக கட்டப்பட்ட ஜிஆர்ஆர்ஏ வகை-5 குடியிருப்புகளைப் பார்வையிட்டு, வீடுகள் ஒதுக்கப்பட்ட பெண்களிடம் சாவிகளை ஒப்படைக்கப்பட்டது.