குடியரசுத் தலைவர் அவமதிப்பு!! பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கண்டிப்பு!!
By : Bharathi Latha
Update: 2026-03-10 13:15 GMT
பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக கண்டித்துள்ளார். குடியரசுத் தலைவரை அவமதித்தது ஏற்க முடியாதது என்று கூறியுள்ளார்.
நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த சந்தாலி பழங்குடியினர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். ஆனால் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்காதது குறித்து பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு சரியான வரவேற்பு அளிக்காதது ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது என்று மோடி கூறியுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விரைவில் தோற்கடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாநாட்டில் பேசியது குறித்து பேசிய மோடி, திரிணமூல் அரசு சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என்று கூறினார்.