சென்னை தரமணி கல்லூரியில் படுகொலை!! அரசியல் தலைவர்கள் கண்டனம்!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரையும் சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த திமுக அரசின் ஆட்சியில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடப்பதை பார்க்க முடிகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
மேலும் சீமான் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கூறினார்.