கொரோனாவில் இருந்து உலகத்தை மீட்டது இந்தியா தான்! அமெரிக்காவின் முன்னணி விஞ்ஞானி பாராட்டு!

Update: 2021-03-09 04:11 GMT

அமெரிக்காவின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரும், பேய்லர் மருத்துவ கல்லூரியின் தேசிய வெப்ப மண்டல மருத்துவ நிறுவனத்தின் டீனுமான டாக்டர் பீட்டர் ஹோடெஸ் பேசுகையில் , இந்தியாவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில், உலகிற்கு இந்தியாவின் பரிசுதான் தடுப்பூசிகள் ஆகும்.

இந்தியாவிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. அதை நானே பார்க்கிறேன். கெரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில், இந்தியாவின் மாபெரும் முயற்சிகள் உலகில் உண்மையிலேயே வெளிவராத ஒரு கதை. எனவேதான் இதை சொல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிற இந்தியா, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது.

இவ்விரு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கி, உள்நாட்டில் உபயோகத்துக்கு கொண்டு வந்ததுடன், உலகின் பல நாடுகளுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த சூழலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிய விஞ்ஞானிகளைப் பாராட்டியதுடன், உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு உதவுவதற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் பயன்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் ஏழைகளையும் நடுத்தர வர்க்கத்தினரையும் அரசு குறிப்பாக கவனத்தில் கொண்டிருந்ததாக அவர் கூறினார். இந்தத் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் உலகிலேயே மிகக் குறைந்த கட்டணமாக ரூ.250-இம் வழங்கப்படுகிறது.

ஆற்றல் வாய்ந்த சிகிச்சை மற்றும் தரமான மருத்துவ பணியாளர்களின் சேவைகளை பெறுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளின் தேவையை பிரதமர் வலியுறுத்தினார்.

கிராமங்களின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மூன்றாம் தர மருத்துவமனைகள் எய்ம்ஸ் போன்ற மருத்துவ கல்லூரிகள் வரை சுகாதார உள்கட்டமைப்பை நீடித்து முழுமையான அணுகுமுறையை வழங்கும் பணியை அரசு தொடங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Similar News